×

கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியால் கெட்டுஅள்ளி கிராமத்திற்கு 2 மாதமாக பஸ்கள் நிறுத்தம்

தர்மபுரி, ஜூன் 25: நல்லம்பள்ளி அருகே, சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் கொட்டி வைத்தும், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கெட்டுஅள்ளி கிராமத்திற்கு 2 மாதமாக அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மறியல் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.நல்லம்பள்ளி தாலுகா எர்ரபையனஅள்ளி ஊராட்சி, கெட்டுஅள்ளி முதல் பங்குநத்தம் வரை 2 கி.மீட்டர் தொலைவிற்கு, சாலை சீரமைப்பதற்காக கற்களை பெயர்த்து, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஜல்லிக்கற்கள் கொட்டி 2 மாதங்கள் ஆகியும், இதுவரை சாலை அமைக்கவில்லை. இதனால், தர்மபுரியில் இருந்து கெட்டுஅள்ளிக்கு வந்து கொண்டிருந்த 2 டவுன் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாதபடி உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கெட்டுஅள்ளி கிராமம் முதல் பங்குநத்தம் கிராமம் வரை சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதையடுத்து, சாலையை தோண்டி பெயர்த்தனர். பின்னர், ஜல்லிக்கற்கள் கொட்டினர். ஆனால், 2 மாதங்கள் ஆகியும் சாலை அமைக்கும் பணி தொடங்கவில்லை. இதனால் எங்கள் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த அரசுபஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால், விரைவில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர்.


Tags : Kettualli ,village ,
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு