கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்

கடத்தூர், ஜூன் 25: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர், தலைவருமான முனிரத்தினம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் திவ்யா ஸ்ரீ வரவேற்றார். யோகா ஆசிரியை ஜெயப்பிரியா யோகா சிறப்பு அவற்றின் நன்மைகள் பற்றி விளக்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக குளோபல் பவுண்டேஷன் தலைவர் சரவணன், அரவிந்த், பெற்றோர்களின் சார்பாக மகேந்திரன் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் பல்வேறு யோகாசன நிகழ்ச்சிகளை மாணவ மாணவியர் செய்து காட்டினர்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags : Yoga Day Celebration ,Kadathur Green Park School ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு