தீர்த்தமலையில் பாமக பொதுக்குழு கூட்டம்

அரூர், ஜூன் 25: அரூரை அடுத்த தீர்த்தமலையில், பாமக ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம், கிழக்கு மாவட்ட செயலர் இமயவர்மன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரூர் தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில், கிரிவல பாதை அமைக்க வேண்டும். கோட்டப்பட்டி அருகேயுள்ள நாகமரத்துப்பள்ளம் தடுப்பணையில் இருந்து தாமரை ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்த்தமலையில் வரும் 14ம் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில துணைத் தலைவர் அரசாங்கம், உழவர் பேரியக்க மாவட்டத் தலைவர் அய்யப்பன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் வேலு, ஒன்றிய செயலர்கள் செந்தில்குமார், திருமால் செல்வன், குமரேசன், சேகர், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Pilgrims ,Meeting ,
× RELATED பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி