கூட்டுறவு பால் சேமிப்பு நிலையம் துவக்க விழா

தா.பேட்டை, ஜூன் 25: முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழபள்ளம் கிராமத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பால் சேமிப்பு நிலைய துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். ஆவின் மேலாளர் தமிழ்ச்செல்வன் பால் சேமிப்பு நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் ஆவின் மையத்தில் பாலை கொடுத்து உரிய விலை பெற்று பயன்பெறுமாறு அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். மேற்பார்வையாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.Tags : Opening Ceremony of Cooperative Milk Storage Center ,
× RELATED தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,806 வழக்குகளுக்கு ரூ.5.34 கோடி தீர்வு