சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்ச பயன்படுத்திய மோட்டார்கள் பறிமுதல்

தா.பேட்டை, ஜூன் 25: முசிறி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் இணைப்புகளில் விதிமுறைகளை மீறி மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் முசிறியில் குடிநீர் விநியோகம் செய்தபோது மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்களை பேரூராட்சி நிர்வாக பணியாளர்கள் மூலம் திடீர் ஆய்வு செய்யப்பட்டு விதிமுறைகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், குடிநீரை வீணாக்காமல் சேமித்து பயன்படுத்துமாறும், விதிமுறைகளை மீறி மின்மோட்டார் மூலம் பேரூராட்சி மூலம் வழங்கும் தண்ணீரை உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். எனவே யாரும் விதிமீறலில் ஈடுபட வேண்டாமென பேரூராட்சி செயல் அலுவலர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
× RELATED தெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்