பிரசாத ஸ்டாலுக்கு கட்டிய டெபாசிட் தொகையை பெற வந்தவர் மீது தாக்குதல்

திருச்சி, ஜூன் 25: கோயில் பிரசாத ஸ்டால் ஏலத்திற்கான டெபாசிட் தொகையை வாங்க வந்தவரை தாக்கிய 4 பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பக்தர்களுக்காக பிரசாத ஸ்டால் உள்ளது. பிரசாத ஸ்டால் ஒவ்வொரு ஆண்டும் பொது ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்தாண்டு திருவானைக்கோயில் பகுதியை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவர் ஏலம் எடுத்து நடத்தி வந்தார். இந்தாண்டுக்கான ஏலம் கடந்த 21ம் தேதி நடந்தது. அப்போது உறையூரை சேர்ந்த முருகேசன் என்பவர் ஏலம் எடுத்தார்.

இதையடுத்து ஸ்டாலுக்கு கட்டியிருந்த முன்பணத்தை திரும்ப பெறுவதற்காக முரளிகிருஷ்ணன் அங்கு நின்றிருந்தார். அப்போது ஏலம் எடுத்த முருகேசன் மற்றும் இவரது மகன் சத்தியநாராயணன், உறவினர்கள் கருணாகரன், சீனிவாசன் ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் முரளிகிருஷ்ணனை 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Prasad Stall ,
× RELATED தெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்