×

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஜூன் 25: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது.திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (26ம் தேதி) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டம் படித்த, 18 முதல் 35 வயதுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், தங்களது மாற்று சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பிற சான்றிதழ்களின் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். விருப்பம் உள்ள மாற்றுத்திறன் இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.


Tags : employment camp ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்