×

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க வேண்டும். மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூன் 25: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள், திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் காசோலை, தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம், சமூக நலத்துறை மூலம் முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வைப்பீட்டு பத்திரங்கள், கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமன ஆணை என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.11,99,162 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். டிஆர்ஓ சாந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட சமூகநல அலுவலர் தமீமுன்னிசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை