×

மழைபெய்ய வேண்டி மாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு

மணப்பாறை, ஜூன் 25: மணப்பாறை அருகே மழைபெய்ய வேண்டி மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மணப்பாறை பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. பருவமழை கை கொடுக்காததால் விவசாய நிலங்கள் காய்ந்து போனது. விவசாயிகள் பிழைப்பிற்காக திருப்பூர், கோவை போன்ற வெளியூர்களை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மழைபெய்ய வேண்டி மணப்பாறையை அடுத்த மாதம்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள், ஆண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். நல்லமழை பொழிய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறைபோக்க வேண்டும், கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைக்க வேண்டும் என அம்மனுக்கு பாலபிஷகம் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Mariamman Temple ,
× RELATED மழை விட்டும் விடாத தூவானம்