28ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூன் 25: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 28ம்தேதி நடக்கிறது.திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று நீர்ப்பாசனம், வேளாண், இடுபொருட்கள், வேளாண் சார்ந்த கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். விவசாய பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.


Tags : Midnight Farmers' Oversight Meeting ,
× RELATED வெளி மாநிலங்களுக்கு அழைத்து சென்று...