×

ரூ.12 லட்சம் மதிப்பில் 40 பேருக்கு நலத்திட்ட உதவி தொட்டியம் ஒன்றியம் கோடியம்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்

திருச்சி, ஜூன் 25: எந்த வசதியும் இல்லாத கோடியம்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவித்து வசதிகளை மேம்படுத்தித் தரவேண்டும் என தொட்டியம் ஒன்றியம் நெசவாளர் பெண்கள் மேம்பாட்டு இயக்கத்தை சேர்ந்த ஏராளமானோர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா, மணமேடு அருகே கோடியம்பாளையம் பகுதியை சேர்ந்த நெசவாளர் பெண்கள் மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் வெள்ளையம்மாள் தலைமையில் செயலாளர் விஜயா, பொருளாளர் பூங்கொடி, செயற்குழு உறுப்பினர் தனபாக்கியம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தொட்டியம் ஒன்றியம் அலகரை ஊராட்சியின் ஒரு துணைக் கிராமமாக கோடியம்பாளையம் உள்ளது.

இக்கிராமம் பாரம்பரிய நெசவாளர் கிராமம். 5,000 நெசவாளர்கள் இங்கு வசிக்கின்றனர். தற்போது நெசவுத் தொழில் நலிவடைந்து விட்டதால், இங்குள்ள நெசவாளர்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர். இக்கிராமம் சேலம் முதன்மை சாலையில் இருந்தாலும் எவ்வித அரசுக் கட்டிடங்களும், ஊராட்சி மன்றம், விஏஓ அலுவலகம், துணை சுகாதார நிலையம், கால்நடைக் கிளை நிலையம், ஊராட்சி சேவைக் கட்டிடம், மகளிர் சுய உதவிக்குழுக் கட்டிடம், மகளிர் சுகாதார வளாகம் முதலிய வசதிகள் எதுவும் இல்லை. அரசு தொடக்கப்பள்ளிக் கூட இல்லை. அனைத்து தேவைக்கும் பக்கத்து ஊர்களுக்கே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. கோடியம்பாளையம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஒரு ஊராக உள்ளது. எனவே கோடியம்பாளையம் நெசவாளர் கிராமத்தை தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : panchayat ,persons ,Kodiyampalayam ,village ,
× RELATED லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100...