×

நெசவாளர் பெண்கள் மேம்பாட்டு இயக்கம் மனு பயிர்காப்பீட்டு நிவாரண தொகைகேட்டு கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

லால்குடி, ஜூன் 24: லால்குடி அருகே பல மாதங்களாகியும் பயிர்காப்பீட்டு நிவாரண தொகை விவசாயிகளுக்கு வழங்காததை கண்டித்து வெங்கடாசலபுரம் கிராம விவசாயிகள் கூட்டுறவு வங்கி முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வெங்கடாசலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2017-18 ஆண்டிற்கான பயிர்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் 241 பேர் பயிர் காப்பீடு செய்திருந்தனர். பல மாதங்களாக பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் பயிர் காப்பீட்டு நிவாரண தொகை பல மாதங்களுக்கு பிறகு விவசாயிகளுக்கு வெங்கடாசலபுரம் கூட்டுறவு வங்கி முலம் வழங்கப்பட்டுள்ளது. வெங்கசலபுரம் பகுதியைச் சேர்ந்த மீதமுள்ள 79 விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு நிவாரணத்தொகை வழங்கப்படாததை கண்டித்து வெங்கடாசலபுரம் கூட்டுறவு வங்கி முன் தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் பேராசிரியர் ஜான்குமார், சிங்காரம், பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உடனடியாக நிவாரணம் வேண்டும், நிவாரணதொகை வழங்கா விட்டால் விரைவில் மாவட்ட வேளாண் அலுவலகம் முன்பு தண்ணீர் அருந்தாத உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்று விவசாயிகள் கூறினர்.

Tags : demonstration ,Co-operative Bank ,
× RELATED நாமக்கல் கூட்டுறவு வங்கி தலைவராக ராஜேஸ்குமார் எம்பி பொறுப்பேற்பு