×

வறட்சியால் மொட்டையான தென்னை மரங்கள் மின்கம்பியில் சிக்கி மயில் பலி

திருச்சி, ஜூன் 25: திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் வங்கி ஆபீசர்ஸ் காலனி பகுதியில் நேற்று ஆண் மயில் ஒன்று இறந்து  கிடந்தது. இதுகுறித்து மயிலை மீட்ட வனத்துறையினர் நடத்திய விசாரணையில், கலெக்டர் அலுவலகம் மற்றும் இப்பகுதியில் மயில்கள் அதிகளவில் வந்து செல்லும். இதில் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.


சட்டவிரோதமாக மணல் கடத்தி செல்லும்
மாட்டு வண்டிகளால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
திருச்சி, ஜூன் 25: சட்ட விரோதமாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதால் நகர மற்றும் புற நகர சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா வலியுறுத்தி உள்ளது.திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அகில பாரத இந்து மகா சபா மாநில துணை செயலாளர் ராமநாதன் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளில் சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வருகின்றனர். மணல் ஏற்றி வரும் மாட்டு வண்டிகள் இரவும், பகலுமாக தொடர்ந்து கன்னியாகுமரி - சென்னை பைபாஸ், புறவழிச்சாலை, முசிறி செல்லும் நாமக்கல், சேலம் ரோடு, தஞ்சை, மயிலாடுதுறை செல்லும் (கல்லணை வழியாக செல்லும்) சாலைகள், காவிரி, கொள்ளிடம் இரு புறங்களிலும் மணல் கடத்திக்கொண்டு நூற்றுக்கணக்கில் செல்கிறது.

இதனால் காலை, மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்தந்த சாலைகள் வழியாக அரசு ஊழியர்கள், மாணவ, மாணவியர், தொழிலாளர், ஆசிரியர், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிரைவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க வேண்டும். தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள சூழலில் மணல் கடத்துவது நிலத்தடி நீராதாரத்தை பாதாளத்துக்கு கொண்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நடவடிக்கை எடுக்க கோரிக்கைடிரைவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

Tags : Coconut Trees ,
× RELATED வர்த்தக நிறுவனங்கள், பஸ்கள்...