2 லாரிகள் பறிமுதல் வலங்கைமான் பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான், ஜூன் 25: வலங்கைமான் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக மழைபெய்யாத நிலையில் நேற்று மாலை பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 6 மாதகாலமாக மழை பெய்யவில்லை. மழை இல்லாததால் கடும் வெப்பம் நிலவி வந்தது. அதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்தனர். மேலும் கோடை நெல் சாகுபடி மழை இல்லாததால் போதிய வளர்ச்சி அடையாமல் உரிய மகசூலை அளிக்கவில்லை. அதே போன்று உளுந்து, பயறு, எள் உள்ளிட்டவைகளும் உரிய மகசூல் அளிக்கவில்லை. பருத்தியும் மழை இல்லாததால் அதிக பூச்சிதாக்குதல் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வலங்கைமான் பகுதியில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. ஆறு மாதத்திற்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.Tags : Valangaiman ,
× RELATED 19ம் தேதி லாரிகளை இயக்க வேண்டாம்