திருவாரூரில் புதிய வர்த்தக சங்க கட்டிட திறப்பு விழா

திருவாரூர், ஜூன் 25: திருவாரூர் பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்ட திருவாரூர் ,விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தால் கட்டப்பட்ட மினி ஏசி ஹால் திறப்பு விழா நடைபெற்றது.வர்த்தக சங்கத் தலைவர் பாலமுருகன் மற்றும் பொது செயலாளர் குமரேசன், துணைத் தலைவர்கள் தங்கதுரை, ஆனந்த், பொருளாளர் சாதிக் பாட்சா செயலாளர்கள். சித்தி விநாயகம், உதயகுமார், அண்ணாதுரை, மற்றும் பி.ஆர்.ஓ ஜமால்முகமது ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். புதிய வர்த்தக சங்க கட்டிட திறப்பு விழாவில் கட்டிட குழு தலைவர் கனகராஜன் தலைமை வகிக்க பன்னீர்செல்வம் ஏசி ஹால்அரங்கத்தையும்.கார்த்திகேயன்( நாராயணி நிதி லிமிடெட்) உணவு அரங்கத்தையும் திறந்து வைத்தனர். கவிஞர் நெல்லை ஜெயந்தா “வர்த்தகமே வாழ்க்கை” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முடிவில் பொது செயலாளர் குமரேசன் நன்றி கூறினார். விழாவில் வர்த்தக உறுப்பினர்கள், வணிகப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.Tags : New Trade Association Building ,Thiruvarur ,
× RELATED கண்டலேறு அணையில் இருந்து...