திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி துவங்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஜூன் 25: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி துவக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது.திருவாரூர் தெற்கு மாவட்டதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு, ஆதிரெங்கம் கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்டதலைவர் முகம்மது மிஸ்கீன் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு வரவு செலவு கணக்கு விபரம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.கூட்டத்தில் யோகாவை பள்ளிக்கூடங்களில் கட்டயமாக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது, முஸ்லீம் பெண்கள்பாதிக்கும் வகையில் முத்தலாக்கை சட்டமாக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் ரத்தவங்கியமைக்க கோரியும், கேட் கீப்பர்களை நியமித்து திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவையை விரைவில் துவங்கவலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் கிளை தலைவராக தேர்வு செய்யப்பட்டரஹ்மத்துல்லாஹ் நன்றி கூறினார்.

Tags : Government Hospital ,
× RELATED வால்பாறையில் ரத்த வங்கி ஏற்படுத்த கோரிக்கை