×

மன்னை ஜோத்பூர் விரைவு ரயிலில் உத்க்ரிஸ்ட் பெட்டிகள் அறிமுகம் வெள்ளோட்டம், துவக்க விழா நடந்தது

மன்னார்குடி, ஜூன்25: மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் செல்லும் பகல்கீ கோத்தி வாராந்திர விரைவு ரயில் அனைத்து நவீன வசதிகளை கொண்ட உத்க்ரிஸ்ட் பெட்டிகள் கொண்ட ரயிலாக தெற்கு ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. இதற்கான வெள்ளோட்டம் மற்றும் துவக்க விழா மன்னார்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.விழாவிற்கு திருச்சி ரயில்வே கோட்ட சுற்றுப்புற மற்றும் பராமரிப்பு பிரிவு மேலாளர் அணில் குமார் சிசோடியா தலைமை வகித்து உத்க்ரிஸ்ட் பெட்டிகளை அறிமுகம் செய்து ரயிலை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு தஞ்சை சீனியர் செக்சன் (மெக்கானிக்கல்) பிரிவு பொறியாளர் மணிவண்ணன், மன்னார்குடி ரயில் நிலைய மேலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வசதிகள் குறித்து மேலாளர் அணில் குமார் சிசோடியா கூறுகை யில்,உத்க்ரிஸ்ட் ரயில் பெட்டிகளில், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்படும். குப்பை தொட்டிகள் ரயில் பெட்டிகளிலும் கழிவறையிலும் தனித்தனியே வைக்கப் பட்டிருக்கும். தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் ரயில்களில் பயணம் செய்து தேவைக்கேற்ப அவ்வப் போது பெட்டிகளை சுத்தம் செய்து கொடுப்பார். ரயில் பெட்டிகளின் தரைத் தளம் புதிதாக பிளாஸ்டிக் கொண்டு அமைக்கப்பட்டிற்கும். இருக்கைகள் கூடுதல் குஷன் வசதிகளோடு இருக்கும்.குளிர் சாதன பெட்டிகளில் புதிய திரைசீலைகள் அமைக்கப் பட்டிருக்கும். ரயில் பெட்டிகள் வண்ணம் நீல நிறத்திலிருந்து காவி கலந்த நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு பெட்டிகளிலும் 4 கழிவறைகள் பயோ கழிவறையாக மாற்றப் பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்டுள்ள உத்க்ரிஸ்ட் ரயில் பெட்டிகளில், பார்வையற்றோர் அறியும் வசதிகள், நவீன கழிப்பறைக்கான பராமரிப்பு பூட்டு,கழிப்பறைகளில் வால்வுகள், இரவு நேரங்களில் இருக்கைகளை அறியும் ஒளிரும் ஸ்டிக்கர், புதிய வடிவைப்பில் குடிநீர் தாங்கி, பெரிய அளவில் முகம் பார்க்கும் கண் ணாடி, கழிவறையில் காற்றை வெளியேற்ற மின்விசிறி, நறுமணத்துடன் கூடிய காற்று வீசும் மின்கருவி, மேல் இருக்கைகளுக்கு செல்ல வசதியான புதிய ஏணி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : Mangalore ,Jodhpur Fast Train Introduction ,
× RELATED முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் எடுத்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்