×

விவசாயிகளுக்கு அதிகாரி வேண்டுகோள் தென்னை மரத்திற்கு இழப்பீடு வழங்குவதில் முறை கேடு அலுவலர் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் விவசாயி புகார் மனு

திருவாரூர், ஜூன் 25: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தென்னை மரத்திற்கு இழப்பீடு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயி ஒருவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவில் வீசிய கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் கோட்டூர் ஒன்றியங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் முத்துப்பேட்டை பகுதியில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இவ்வாறு புயலில் பாதிக்கப்பட்ட வீடுகள், மரங்கள், விவசாய நிலங்கள், கால்நடைகள் போன்றவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் பல மாதங்கள் வரையில் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை ஒன்றியம் செருபனையூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு தென்னை மரத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையானது அவருக்கு பதில் வேறு ஒருவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலசுப்ரமணியன் ஏற்கனவே 2 முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத பட்சத்தில் நேற்றும் 3வது முறையாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மேலும் அவர் தனது மனுவில், தனக்குரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்பதுடன், இழப்பீடு தொகையினை வேறு ஒருவரின் வங்கி கணக்கில் வரவு வைத்து மோசடியில் ஈடுபட்ட வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : farmer lodges ,collector ,officer ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...