நுண்ணீர் பாசன கருவிகளை பெற்று நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

வலங்கைமான், ஜூன் 25: வலங்கைமான் வட்டா விவசாயிகள் வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்படும் நுண்ணீர் பாசணகருவிகளை பெற்று தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மற்றும் நிம்பஸ் நிறுவனம் இணைந்து சுமார் 46 கிராமங்களில் நுண்ணீர் பாசன திட்ட தீவிர முனைப்பு இயக்கம் நடத்தப்பட்டது.அதில் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் பெற விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன திட்டம் மற்றும் சிக்கன நீர் பாசன முறையை கடைபிடிக்க வேண்டும் எனவும், கடந்த ஆறு மாதமாக மழை பொய்த்துப் போனதாலும் தற்போது அதிகமாக வறட்சி நிலவுவதாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாலும் ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும், திறன்படவும் பயன்படுத்தும் வகையில் தமிழகஅரசு வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசனத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பாசனநீர் விரயமாகாமல் நேரடியாக செடியின் வேர்பகுதிக்கு செலுத்தப்படுகிறது. அதனால் தண்ணீரின் அளவை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வேளாண்மை கருவிகளான தெளிப்பு நீர் கருவி மழைத்தூவான் மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த நுண்ணீர் பாசன முறையில் உர மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவிஅலுவலர்கள் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள். சொட்டுநீர் பாசன கருவி தெளிப்பு நீர் கருவி மழை தூ£வான் கருவிகள் குறித்த செயல்விளக்கத்தை தனியார் பைப் நிறுவன விற்பனையாளர் சிவக்குமார் அளித்தார்.இதைத் தொடர்ந்து அந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ள விவசாயிகள் இணையத்தில் பதிவு செய்துகொள்ள சிறு, குறு விவசாயி சான்று, கணிணி சிட்டா, அடங்கல், வரைப்படம், 2 புகைப்படம், ரேஷன்கார்டு அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நீர் நிலைக்கான ஆதாராத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்வதற்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தேர்வு செய்து விலைப்புள்ளி தயாரித்து ஆணை வழங்கப்படும்.இத்திட்டத்தில் அதிகபட்சமாக 5 ஹெக்டேர் வரை விவசாயிகள் பயன்பெறலாம். விவசாயிகள் அணைவரும் நுண்ணீர் பாசன திட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களிடம் பதிவு செய்து பயன் பெறவேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED சாலையோரம் விவசாய உபகரணங்கள் விற்பனை: வடமாநில தொழிலாளர்கள் முகாம்