×

முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கோட்டகத்தில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்

முத்துப்பேட்டை, ஜூன்25: முத்துப்பேட்டை அருகே பாண்டி கோட்டகத்தில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியது. சீரமைப்பு பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்புககளுக்கு கொள்ளித்திலிருந்து மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், மாங்குடி, கடுவெளி, சங்கேந்தி வழியாக எடையூர் சம்புக்கு வந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப்லைன் வழியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளை சென்றடைகிறது. பின்னர் அருகிலிருக்கும் ஊராட்சி கிராம பகுதிகளுக்கு பைப்லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

அதேபோல் எடையூர் சம்பிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு சென்று அடைகிறது. இந்நிலையில் தினசரி பம்பிங் செய்யப்படும் குடிநீர் அந்தந்த பகுதிக்கு செல்லும்போது குடிநீரின் பாதிஅளவு குறைந்து விடுகிறது. இந்த நீர்வரத்து குறைவால் மக்களுக்கு வழங்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நீண்ட காலமாக முத்துப்பேட்டை பகுதி ஊராட்சி நிர்வாகத்தினர் கவலையுடன் தெரிவித்து வந்தனர். அதேபோல் இதே பிரச்னையால் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட பகுதியில் சமீபகாலமாக கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பல்வேறு பகுதி மக்கள் தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விலைக்கு வாங்கி வருகின்றனர். மேலும் அடிக்கடி இப்பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. அதனை குடிநீர் வாரியமும் உடனுக்குடன் சரி செய்வதில்லை. இதன் மூலம் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.. இந்தநிலையில் நேற்று பாண்டி கோட்டகத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியது. அப்பகுதிக்கு வந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகள் முன்னிலை பணியாளர் சீரமைப்பு பணிகளை துவங்கினர்.இதில் ஜேசிபி இயந்திரங்களால் நீளமான பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு இனியும் இதுபோன்று உடைப்புகள் ஏற்படாத வகையில் முறையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bundy Coldwater Pipe Breakdown ,
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...