மீனாட்சி சந்திரசேகரன் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வகுப்புகள் துவக்க விழா

பட்டுக்கோட்டை, ஜூன் 25: பட்டுக்கோட்டை கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கியதையடுத்து முதலாமாண்டு மாணவிகளை கல்லூரியில் பயிலும் மாணவிகள் சார்பில் வரவேற்கும் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் ஷீலா முன்னிலை வகித்து மாணவிகள் தன்னம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் தன் கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்றார். கல்லூரி சேர்மன் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். தஞ்சை சிட்டி யூனியன் வங்கி ஏஜிஎம் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகள் தாங்கள் பயில வேண்டிய கல்லூரியை சரியாக தேர்வு செய்துள்ளனர். மாணவிகளுக்கு எதிர்காலத்தில் நிறைய போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற கலை மற்றும் அறிவியல் படிப்பானது உறுதுணையாக இருக்கும் என்றார். இதைதொடர்ந்து ஏற்கனவே பயிலும் கல்லூரி மாணவிகள் வாழ்த்து தெரிவித்து முதலாமாண்டு மாணவிகளை வரவேற்றனர்.3ம் ஆண்டு கணினி அறிவியல்துறை மாணவி தேவிபிரியா வரவேற்றார். 3ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ஜெயபிரியா நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை 2ம் ஆண்டு கணிதவியல்துறை மாணவி திவ்யா, 2ம் ஆண்டு வணிகவியல்துறை மாணவி உமாபாரதி தொகுத்து வழங்கினர்.

Tags : Meenakshi Chandrasekaran Women's College Opening Classes ,
× RELATED கும்பகோணம் புதிய பேருந்து...