போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூன் 25: பென்ஷன் தொகையை மாதத்தின் முதல் தேதியில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன், செயல் தலைவர் கணேசன், பொருளாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பிரதி மாதம் 1ம் தேதியே ஓய்வூதியம் வழங்க வேண்டும். பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 13வது ஊதிய ஒப்பந்தத்தை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.Tags : Transit university retirement welfare demonstration ,
× RELATED மக்கள் அச்சம் திருவையாத்துக்குடியில்...