தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பாபநாசம், ஜூன் 25: பாபநாசம் அருகே பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் இளையபாரதி (28). ஹோட்டல் தொழிலாளி. இவர் மதகடி பஜாரில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது முத்து, விஜய், கரண் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து இளையபாரதியை தாக்கினர். இதில் காயமடைந்த இளையபாரதி, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags :
× RELATED கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்