மழை வேண்டி சிறப்பு தொழுகை

சேதுபாவாசத்திரம், ஜூன் 25:மழை பெய்ய வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முடச்சிக்காடு கிளை சார்பில் மரக்காவலசை கமால் பாஷா இல்லம் அருகே சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்ட பேச்சாளர் ஆவணம் முஹம்மது யூசுப் பங்கேற்று தொழுகை நடத்தினார். கிளை தலைவர் முகமது அனிபா, செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் சேட் இப்ராஹிம்ஷா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கும்பகோணம்: கும்பகோணத்தில் சாந்தி நகரில் உள்ள பள்ளிவாசல் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. மாநில செயலாளர் தாவூத் கைசர் தலைமை வகித்தார். இதில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவும், மழை வேண்டியும், தமிழக அரசு தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

இதேபோல் ஆவணியாபுரத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ஜபருல்லாஹ், பாஜில் மன்பஈ, ஹாபில் முஹம்மது, தல்ஹா மிஸ்பாஹி, நஸ்ருதீன், ஷாஹுல் ஹமீது, தாவூதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தவ்ஹீத் ஜமாஅத் பட்டுக்கோட்டை கிளை உறுப்பினர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...