டிஐஜி துவக்கி வைத்தார் அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

புதுக்கோட்டை, ஜூன் 25: புதுக்கோட்டையை அடுத்த திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018-19ம் ஆண்டில் நடைபெற்ற அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார். டாக்டர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சீனிவாசன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.Tags : DIG ,Government School Gifting Ceremony ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...