×

பொதுமக்கள் தவிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் சாலை மறியல்

புதுக்கோட்டை, ஜூன் 25: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் கன ராங்கியன்விடுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை, குடிநீர் வசதி,சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கள் 536 மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் ராங்கியன்விடுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ராங்கியன்குளம் உள்ளது. இந்த நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ராங்கியன்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் 1ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.அதே போல ராங்கியன்விடுதி பொதுமக்கள் கொடுத்த மற்றொரு மனுவில், நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக மனு கொடுக்கப்பட்டதை தொடர்ந்து வருவாய் கோட்டாச்சியர் வந்து கடந்த 19ம் தேதி விசாரணை நடத்தினார். அப்போது நீர்நிலை புறம்போக்காக உள்ள இடத்தில், குறுவை சாகுபடிக்கு தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்துக் கொள்வோம் என்றார். அதற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே இந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் குறுவை சாகுபடிக்கு பொது இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 9 ஏ நத்தம் பண்ணை ஊராட்சியைச் சேர்;நத பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சி மன்ற அலுவலகம் திருச்சி சாலையில் உள்ள அரசு ஐ.டி.ஐ காலணியில் உள்ள சேவை மையத்தில் இயங்கி வருகிறது.இங்கு உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக் கூடாது. புதிய கட்டிடம் கட்டும்வரை அலுவலகம் இதே கட்டிடத்தில் இயங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.புதுக்கோட்டை உடையநெரி காலனி பொதுமக்கள் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றியச்செயலாளர் சுபாஷினி கொடுத்த மனுவில் உடையநெரி காலணி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

இப்பகுதி இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர், தெருவிளக்கு கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதி கிடையாது.எனவே இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.ஆவுடையார்கோவிலை அடுத்த பனையவயலைச் சேர்ந்த ரவிகுருக்கள் கொடுத்த மனுவில், நான் பனையவயல் பகுதியில் உள்ள வௌ;ளாற்று பாலம் அருகே சரபேஸ்வர் பெயரில் கோவில் அமைத்துள்ளேன். இங்கு ஐம்பொன்னால் ஆன சரபேஸ்வர், பிரத்தியங்கிரா, தெட்சினகாளி ஆகிய சிலைகளை வைத்து பு+ஜைகள் செய்து வந்தேன். இந்நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு கோவிலின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோவிலில் இருந்த 3 ஐம்பொன் சிலைகள், பித்தளை பொருட்களை திருடிச் சென்றுவிட்டன். இதுகுறித்து கடந்த 22ம் தேதி நான் ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும், இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே திருட்டு போன சிலை உள்ளிட்ட பொருட்களை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



Tags : government ,water bodies ,Pudukkottai ,
× RELATED நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு...