கறம்பக்குடி அருகே தாய், மகளை தாக்கிய கல்லூரி மாணவர் கைது

கறம்பக்குடி, ஜூன் 25: கறம்பக்குடி அருகே தாய் மகளை தாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கிலான்காடு முதலிப்பட்டி ஊராட்சி கீழத்தெரு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் தினகரன் (18). பொறியியல் மாணவர். ராஜ்குமார் குடும்பத்திறஅகும் அதே தெருவில் வசிக்கும் சந்திரகலா குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று தினகரன் சந்திரகலா வீட்டிற்குள் புகுந்து தாய் சந்திரகலா மற்றும் அவரது மகள் வைத்தீஸ்வரி(19) ஆகிய இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கறம்பக்குடி ரெகுநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags : College student ,Karambakkudi ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...