×

யோகா பயிற்சியில் மாணவர்கள் கந்தர்வகோட்டையை பேரூராட்சியாக தரம் உயர்த்த ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை,ஜூன்25:  கந்தா–்வகோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியா் சங்கத்தின் கந்தர்வகோட்டை வட்ட கிளை 2ம்ஆண்டு வட்டப்பேரவை மாநாடு நடைபெற்றது.கூட்டத்திற்கு கந்தா–்வகோட்டை வட்டக்கிளை தலைவா் பழனியான்டி தலைமை வகித்தார். பழனிவேலு வரவேற்றார். கந்தர்வகோட்டை தாசில்தார் கலைமணி சிறப்புரையாற்றினார்.கந்தர்வகோட்டையை தலைமையிடமாக கொண்டு சார்புநிலை நீதிமன்றம் பொதுமக்கள் நலன்கருதி அரசு உடனடியாக அமைத்து தர வேண்டும், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் குடிநீர்பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.

பொதுமக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் உடனடியாக அரசு குடிநீர் வழங்க ஆவணம் செய்யுமாறு இந்த மாநாடு கேட்டுக் கொள்கின்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் குடிதண்ணீர் இல்லாமலும், கழிப்பறை வசதிகள் இல்லாமலும் மிகவும் அவதிபடுகின்றனர். அரசு உடனே நடவடிக்கை எடுத்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். நீட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை மாநாடு கேட்டுக் கொள்கிறது, கந்தர்வகோட்டை தாலுகாக்காவும், சட்டமன்றத் தொகுதியாகவும் உள்ளது. மேலும் இங்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா;. ஆனால் இன்றுவரை ஊராட்சி ஒன்றியமாக உள்ளது. எனவே கந்தர்வகோட்டையை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : Pensioners ,
× RELATED ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்