மணமேல்குடி அருகே கலெக்டர் பங்கேற்ற மனுநீதி முகாமை மக்கள் புறக்கணிப்பு பிளக்ஸ் பேனரால் பரபரப்பு

மணமேல்குடி, ஜூன் 25: மணமேல்குடி அடுத்த கோ.பனங்குளம் வட்டத்திற்கு உட்பட்ட அம்பலவாணனேந்தல் கிராமத்தில் தமிழக அரசின் மூலம் 2018ம் ஆண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க அரசாணை வெளியானது. அதன்படி ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டு அதற்குரிய மருத்துவ உபகரணங்கள் கிராம மக்களின் பங்களிப்போடு வாங்கப்பட்டு அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு மருத்துவரும், செவிலியரும் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் தொடங்கிய நாளிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல், மருத்துவரும், செவிலியரும் அம்பலவாணனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு கோட்டைபட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.

கோ.பனங்குளம் வட்டத்திற்கு உட்பட்ட சுமார் 15 கிராமங்களை சேர்ந்த விவசாய பொதுமக்கள் சிகிச்சை பெற வெகுதூரம் செல்லவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது சம்மந்தமாக பலமுறை மாவட்ட கலெக்டருக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பலமுறை மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கோ.பனங்குளம் வட்டத்தில் நேற்று நடக்கவிருந்த மாவட்ட கலெக்டரின் மனுநீதி முகாமை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனராலும்,நோட்டீசாலும் பொதுமக்கள் தெவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Manamalgudi ,Collector Participation Center ,
× RELATED ராசிபுரத்தில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்