×

கறம்பக்குடியில் திமுகவினருக்கு உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கல்

கறம்பக்குடி, ஜூன் 25: கறம்பக்குடியில் திமுகவினருக்கு உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக வடக்கு தெற்கு ஒன்றியத்தில் திமுக தலைமை கழகம் சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றியம், நகரம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சிக்கு கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் திமுக தலைமை கழகம் மூலம் நியமிக்கப்பட்ட கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் கலந்து கொண்டு திமுகவினருக்கு உறுப்பினர் உரிமை சீட்டுகளை வழங்கினார்.

அதேபோல் கறம்பக்குடி திமுக தெற்கு ஒன்றியம் சார்பாக வெட்டன்விடுதியில் நடைபெற்ற உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் தலைமை வகித்தார். இதிலும் அப்பாஸ் கலந்து கொண்டு திமுகவினருக்கு உரிமை சீட்டுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான பெரியண்ணன் அரசு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கேகே செல்லப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணை செயலாளர் ராஜேஸ்வரி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில்...