×

ஆவணத்தான்கோட்டை, மேற்பனைக்காடு ஊராட்சியில் மக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் திறந்தால் மறியல் போராட்டம் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

புதுக்கோட்டை, ஜூன் 25: அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க கூடாது என மகளிர் சுயஉதவிக்குழுவினர் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான்கோட்டை இளைய மகாத்மா இளைஞர் மன்றம், மகளிர் சுயஉதவிக்குழ சார்பில் பெண்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஆவணத்தான்கோட்டையில் டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிந்தோம். கடை அமைப்பதற்காக முயற்சி மேற்கொள்ளப்படும் இடத்தில் பள்ளிகள், கோயில்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் இந்த வழியாகத்தான் பல்வேறு பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் செல்ல வேண்டி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆவணத்தான்கோட்டையில் டாஸ்மாக் மதுபானக் கடைஅமைக்கும் முடிவை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.இதேப்போல கறம்பக்குடி தாலுகா ராங்கியன்விடுதியிலும் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மேற்பனைக்காடு ஊராட்சி:இதே போல், மேற்பனைக்காடு ஊராட்சியில் கிழக்கு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. அந்த கடையால் அருகில் உள்ள பள்ளி மற்றும் கோயில் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பெண்கள், இளைஞர்கள் என பொதுமக்கள் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை கடையை திறந்த நிலையில் மீண்டும் மக்கள் போராட்டம் நடத்தியதால் நிரந்தரமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது.இந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து வாங்கி மீண்டும் கலெக்டரிடம் மனுவாக அளித்தனர். அதையும் மீறி கடை திறக்க வந்தால் பெண்கள் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் என்று கிராமமக்கள் கூறினர்.காவிரி டெல்டாபாசன பகுதிகளில் முற்பட்ட குறுவை நிலத்தடி நீரைக் கொண்டு  விவசாயம் செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை 37 என்கிற மோட்டா ரகம் தற்பொழுது கால சூழலுக்கு ஏற்றது. வெயிலையும் தாங்கும் தண்ணீர் குறைவு ஏற்பட்டாலும் தாக்கு பிடிக்கும் மழை பெய்தாலும் ஓரளவிற்கு ஈடு கொடுக்கும் திறன் வாய்ந்தது. ஆடு துறை 37 ரகம் தான் தற்பொழுது  பயிரிடப்பட்டுள்ளது. நடவு நட்டு களை பறிக்கும் சீசன் ஆரம்பித்துள்ளது.

அதே போன்று குறுவை விவசாயம் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 தினங்களாக களை பறித்தல், நாற்று நடவும் பணியும் தீவிரமாக நடை பெற்று வருகி றது.ஆனால் அதற்கு தேயைவான ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வயல் வேலை இல்லாத நேரத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்பதால் மத்திய அரசு 100நாள் வேலைவாய்ப்பை உருவாக்கி செயல் படுத்தி வருகிறது. ரூ.150 வரை கிடைக்கும் கூலியில் 10% மாநில அரசும், 90% மத்திய அரசும் நிதி தருகிறது.   விவசாய வேலை இல்லாத காலத்தில் விவசாய கூலித்தொழிலாளர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்கு கொண்டு வந்த இந்த திட்டம், தற்பொழுது விவசாய வேலைகள் உள்ள காலத்தில் வேண்டுமென்றே ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் இந்த வேலை யை அளிக்கின்றனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி எழுத்தர் ஒருவர் இருக்கிறார். அவருக்குத் தெரி யும் இப்பகுதியில் விவசாய வேலைகள் நடை பெறுகிறதா இல்லையா என்று, எதை யும் கவனிக்காமல் விவசாய வேலை உள்ள நேரத்தில் வேண்டுமென்றே 100 நாள் வேலையை அளிப்பதால் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அங்கே சென்று விடுகின்றனர்.  நாற்று நடுவதிலும், களை பறிப்பதிலும் உள்ள சிரமம்  பெயரளவிற்கு 100நாள் வேலை பார்ப்பதில் இருப்பதில்லை. 100நாள் வேலை என்றால் 10% உழைத்தால் போதும். வயல் வேலை என்றால் 100% உழைத்தாக வேண்டும்.  இதனால் கூலித் தொழிலாளர் கள் 100நாள் வேலைக்கு செல்வதையே விரும்புகின்றனர். வற்புறுத்தி அழைத்தால் அதிக சம்பளம் கேட்டு வற்புறுத்துகின்றனர்.

ஒரு ஆள்  ஏக்கர் கணக்கில் கூலிபேசி நடுவார்கள். எப்படியும் ஆள் ஒன்றுக்கு ரூ.200 கிடைக்கும். தற்பொழுது 100நாள் வேலை இருப்பதால் நடவுகூலி ரூ.400வரை கூலி ஆகிறது. அதே போன்று பல்வேறு இடங்களில் களை பறிக்கும் காலம் துவங்கியுள் ளது. களை பறிப்பதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.200 வரை கூலி வழங்கப்படுகிறது.  காலை 10.30 மணிக்கு வந்து பிற்பகல் 1 மணிவரை வேலை பார்ப்பார்கள். 2மணி வரை உணவு இடைவேளை. அதன் பிறகு 2மணிக்கு வேலை ஆரம்பித்து மாலை 4.30 மணிக்கு கலைந்து செல்வார்கள். இதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 5மணிநேர வேலை மட்டும்தான். ரூ.200 கூலி தரப்பட்டாலும் டெல் டா பாசன பகுதிகளில் 100நாள் வேலை வாய்ப்பால் களை பறிக்கும் பணி நடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வற்புறுத்தி கேட்டால் கூலி அதிகரித்துத்தர கோருகின்றனர். விவசாய வேலை நடை பெறும் காலங்களில் 100நாள் வேலைக்கு பரிந்துரை செய்யா தீர்கள் என்று விவசாய அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் யாரும் கேட்பதி ல்லை. எந்த நோக்கத்திற்காக 100நாள் வேலை வாய்ப்பு கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கமே அடிபட்டு போய் விடுகிறது என விவசாயிகள் மத்தியில் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், 100 நாள் வேலையால் விவசாய வேலைகள் தான் பாதிக்கப்படுவதுடன் விவசாயி களின் செலவும் அதிகரி த்து வருகிறது. தொடர்ந்து சென்ற ஆண்டு வரை குறுவை தொகுப்புத்திட்டம் என்ற பெயரில் எந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4000 பணம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அதுவும் வரவில்லை. இந்த ஆண்டு இதுநாள் வரை அரசு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. விவசாயப் பணி களும் முடியும் தருவாயில் உள்ளது. இனிமேல் அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கை இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் வருடாவருடம் குறைந்து கொண்டே போகிறது. 150 அடியிலிருந்து 300 அடிவரை நிலத்தடிநீர் மட்டம் சென்று விட்டது.

இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் மழையும் ஆற்றில் தண்ணீரும் வரவில்லை என்றால் அடுத்த ஆண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையும் வாய்ப்பு உள்ளது.  விவசாயிகளின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் விவசாய பணிகள் இல்லாத காலங்களில் 100நாள் வேலைவாய்ப்பை அளிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்றனர்.காவிரி டெல்டா பாசன பகுதிகளில்விவசாயப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. இனிமேல் அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கை இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் வருடாவருடம் குறைந்து கொண்டே போகிறது. 150 அடியிலிருந்து 300 அடிவரை நிலத்தடிநீர் மட்டம் சென்று விட்டது.‘விவசாயிகளை வாட்டி வதைக்கும் கூலித் தொழிலாளர்கள் பிரச்னை குறுவைத் தொகுப்பு திட்டத்தை அரசு கைவிட்டதால் ஏமாற்றம்விவசாயிகளின் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் விவசாய பணிகள் இல்லாத காலங்களில் 100நாள் வேலைவாய்ப்பை அளிக்க அந்தந்த மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

Tags : collector ,task force ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...