அசத்தும் இளைஞர்கள் பெரம்பலூர் நகர மக்களின் நீராதாரமாக விளங்கும் 8 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் சமூகநல கூட்டமைப்பு கோரிக்கை

பெரம்பலூர்,ஜூன்25:  பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று பொதுமக் கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது பெரம்பலூர் மாவட்ட சமூகநலக் கூட்டமைப்பு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணபிரான், செந்தில்குமார், உள்ளிட்டோர் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது : பலஆண்டுகளாக பெரம்பலூர் மக்களின் நீர் ஆதாரமாகவும், பெரம்பலூர் பகுதி விவசாயத் தேவைகளுக்கும் பெரும்வரமாக வெள்ளந்தாங்கியம்மன் ஏரி இருந்து வந் தது. நகரின் மையத்திலுள்ள வெள்ளந்தாங்கியம்மன் ஏரிக்கான நீர்வரத்தாக இருந்த ஏரிகளும் தற்போது முட்புதர்கள் மண்டியும், கழிவுநீராலும் பிளாஸ்டிக் குப்பைகளா லும் சீர்குலைந்து காணப்படுகிறது. பலஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்து வந் ததால், மழைக்காலம் மற்றும் வறட்சிக் காலங்களில் பெய்கிற சிறு மழையினைக்கூட தேக்கிவைத்திட முடியாத சூழலேஉள்ளது. இதனால் பெரம்பலூரின் நிலத்தடிநீர்மட்டம் பெருமளவில் குறைந்து, நீர்த்தேவையினைப் பூர்த்திசெய்வது கேள்விக் குறியாகிவிட் டது.
ஆகவே பொதுப்பணித்துறையின் சின்னாறு வடிநில உபகோட்ட பகுதி&2,ன் கட் டுப்பாட்டிலுள்ள லாடபுரம், குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் மேலேரி, கீழேரி, துறைமங்கலம்ஏரி, புதுஏரிஆகிய ஏரிகளையும் சுத்தப்படுத்தி, தூர்வாரி, பெரம்ப லூர் மக்களின் நீராதாரத்தை மீட்பதோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் அதிகரித்திட நட வடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஏரியின் நீர்வரத்துவாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடுகளோடு சீர்செய்தால் மழைக்காலங்களில் நீரானது வீணாகாமல் முழு மையாக ஏரிக்கு வந்துசேரும். ஆகவே தற்போது நிலவிவரும் வரலாறுகாணாத வறட் சியினை கருத்தில்கொண்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை செயல்படுத்து மாறு கேட்டுக்கொள்கிறோம். பெரம்பலூர் மக்களின் நீர் பற்றாக்குறையினை போக்கு கிற இந்த செயல்பாடுகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு பெரம்பலூர்மாவட்ட சமூகநல கூட்டமைப்பு முழுஒத்துழைப்பு வழங்கும்என இதன்மூலம் உறுதியளிக்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர்(பொ) ராதா, திருச்சி மண்டல பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரஅமைப்பின் தலைமைப்பொறியாளர் ராமமூர்த்தி, பெரம்பலூர் வருவாய்கோட்டாட்சியர் மற்றும் தமிழகமுதல்வர், துணைமுதல்வர், பொது ப்பணித்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் ஆகியோரிடமும் மனுக்களை அளி த்து வருகின்றனர்.

Tags : Social Welfare Association ,Collector ,
× RELATED விசாரணைக்கு அழைத்து விடுவிப்பு...