×

குடிநீர் வினியோகம் முற்றிலும் தடை புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க பெண்கள் மனு

பெரம்பலூர்,ஜூன்25:குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.புதிய ஆழ் குழாய் கிணறுகளை அமைத்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் கலெக்டரிடம் கிழக்கு பெரியம்மாபாளையம் கிராம பெண்கள் கோரிக்கை மனு.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று பொதுமக் கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமப் பெண்கள் திரண்டுவந்து கலெக்டர் சாந்தாவி டம் கொடுத்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : வேப்பந்தட்டை தாலுகா, கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமத்தில் 60குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு போதுமானஅளவிற்கு எந்தவொரு முறையிலும் முழுமையான குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. 3வாரங்களுக்கு பிறகு தண்ணீர் வழங்கப்படுகிறது. அப்போதும் ஏழெட்டு குடங்கள் மட்டுமே குடிநீர் கிடைக் கிறது. ஊராட்சிமன்ற அலுவலகம் அருகேவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுக்கிடக்கிறது. இதன் காரணமாக ஒவ் வொரு நாளும் குடிநீர் இல்லாமல் பெரிதும் திண்டாடிவருகிறோம்.எனவே கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமப்பகுதியில் நீராதாரங்களைக் கண்ட றிந்து அப்பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் புதிய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்து, அதிலிருந்து குடிநீரைப்பெற்று தடையின்றி விநியோகித்திட வேப்பந்தட்டை ஒன்றிய நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரி வித்துள்ளனர்.



Tags : tube well ,
× RELATED காரைக்குடி அருகே செட்டிநாடு...