பெரம்பலூரில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது. கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்பாசனம், வேளாண்மை கடனுதவி, வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடு குறித்து விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Farmers' Oversight Meeting ,Perambalur ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம் 31ல் நடக்கிறது