வேதாரண்யம் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் நாய் கடித்து பலி

வேதாரண்யம், ஜூன் 25: வேதாரண்யம் தாலுகா நாகக்குடையானில் தண்ணீர் தேடி ஊருக்குள் சென்ற மான் நாய்கடித்து பலியானது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தற்போது கடும் தண்ணீர் தட்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் சரணாலயத்திலிருந்து தண்ணீர் தேடி வெளியேறி வருகிறது.நேற்று கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 5 வயதுடைய புள்ளிமான் தண்ணீர் தட்டுபாட்டினால் காட்டை விட்டு வெளியேறி சுமார் 20 கி.மீ தூரம் உள்ள நாகக்குடையான் பகுதிக்கு சென்று விட்டது. அங்குள்ள மேலத்தெரு தீர்த்தாகுளம் அருகே தண்ணீர் குடிக்க சென்றபோது, அந்த மானை நாய்கள் துரத்தி கடித்து விட்டதால் பரிதாபமாக இறந்தது.இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து, கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் புதைத்தனர்.
Tags : Vedaranyam ,
× RELATED மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்...