×

இன்சூரன்ஸ் தொகை வழங்காததால்

மயிலாடுதுறை, ஜூன் 25: பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்காததால் வேளாண் கூட்டுவறு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த உளுத்துக்குப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடந்த 2017-18ம் ஆணடிற்கு பயிர் இன்சூரன்ஸ் கட்டிய 240 விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள வங்கிகளில்7 மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில், மழையின்றி மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை மட்டுமே ஓரளவு நஷ்டத்தை ஈடுசெய்த நிலையில், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே பயிர் இன்சூரன்ஸ் வழங்க வலியுறுத்தியும், உளுத்துக்குப்பை கிராமப் பகுதியில் உள்ள மொழையூரில், ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதனால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்பாதிக்கப்பட்டு, விவசாயம் முற்றிலும் அழியும் நிலை உள்ளது. இதனை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள், ராயர் தலைமையில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்தும், காவிரியில்நீர் திறக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...