பொதுமக்கள் கடும் அவதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு

நாகை, ஜூன் 25:  நாகை அருகே தலைஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நாம் தமிழர் கட்சி நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அப்பு, தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் விஜய்ஆனந்தன் ஆகியோர் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயலின் தாக்கத்தில் டெல்டா மாவட்டம் முற்றிலுமாக அழிந்து விட்டது. இதில் வெள்ளப்பள்ளம் ஊராட்சி அதிக அளவில் பாதிக்கப்பட்டது. அப்போது பார்வையிட்ட அதிகாரிகள் உரிய நிவாரணம் வழங்குவதாக கூறினர். ஆனால் இதுநாள் வரை 282 குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.Tags : flood victims ,area ,
× RELATED டெல்லி வன்முறை தொடர்பாக குடியரசு...