×

கல்வி உதவித்தொகை பெற மாற்றத்திறன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் டிசம்பர் 31ம் தேதி கடைசி

நாகை, ஜூன்25: நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஓர் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய். 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரம். 9ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை ரூ.4 ஆயிரம். இளங்கலை படிப்பிற்கு ரூ.6 ஆயிரம். முதுகலை படிப்பு, தொழிற்கல்வி, தொழில்நுட்பகல்வி, மருத்துவம், பொறியியல் தொழிற்கல்வி ஆகிய படிப்பிற்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டிற்கு பயன்பெற அரசுப் பள்ளிகள் அல்லது கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தொலைதூர கல்வி பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டின் இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற துறைகளில் உதவித்தொகை பெறவில்லை என்று தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.எனவே மேற்கண்ட தகுதி பெற்ற நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். அல்லது nagapattinam.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




Tags :
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...