×

விரைவில் அமைக்க வலியுறுத்தல் காரைக்காலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு எதிர்க்காததற்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தல்

காரைக்கால், ஜூன் 25: காரைக்காலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு எதிர்க்காதது ஏன்? என, முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் டாக்டர் அனந்தகுமார் பத்திரிகையாளர்களிடம் கூறியது:தமிழகத்தில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை மத்திய அரசின் ஒப்புதலுடன் வரவிருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நம்மாழ்வாரின் பேரிடருக்கு எதிரான பேரியக்கம் விடுத்த அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் நாகூரில் ஏராளமான திமுகவினருடன் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நான், நாகூர் சித்திக், தாஹா மரைக்கார் உள்ளிட்ட ஏராளமான இயக்க உறுப்பினர்களுடன் கலந்து கொண்டேன்.

ஹைட்ரோகார்பன் திட்டம் காரைக்காலுக்கு பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதி. மேலும் மீனவர்கள் வாழ்வாதாரம் அழியும். அதைப்பற்றி அந்த இயக்கம் காரைக்காலில் உள்ள கட்சியினர் இடம் தெரிவித்து ஆதரவு திரட்டியும், மனிதசங்கிலி போராட்டம் காரைக்காலில் நடைபெறவில்லை. காரைக்காலில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இது குறித்து இதுவரை எதிர்ப்பு தெரியப்படுத்தாமல் இருப்பது கேள்விக்குறியாக மட்டுமில்லை, வேதனையாகவும் உள்ளது.காரைக்கால் மாவட்ட நிலப்பரப்பில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க பாரத் பெட்ரோ ரிசோர்ஸஸ் லிமிடெட் என்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டத்தை முறையாக எதிர்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அதே மாவட்டத்தின் கடற்பரப்பில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்த என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட திட்டத்தை எதிர்க்காதது ஏன்? முதல்வர் இதில் மௌனம் சாதிப்பது ஏன்? என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பகிரங்கமாக கேள்விகள் எழுப்பியுள்ளது? இதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உதவுவது ஏன் என்றும் அவர் மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும். இது குறித்து முதல்வர் நாராயணசாமிக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.


Tags : government ,Puducherry ,Karaikal ,
× RELATED மருத்துவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி