கள்ளிமேடு அடைப்பாற்றில் தடுப்பணை கட்டும் பணி ஆய்வு

வேதாரண்யம், ஜூன் 25: கள்ளிமேடு அடைப்பாற்றில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு மேற்கொண்டார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு அடைப்பாற்றில் கடல்நீர் உள்ளே புகாதவாறு தடுக்கும் வகையில் ரூ.87 கோடியில் பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. கோடை காலங்களுக்கு தண்ணீரை சேமிக்கவும், இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் தடுப்பு பாலம் கட்டப்பட்டு வருகிறது. தடுப்பணை கட்டும் பணிதுரிதமாக நடைபெற்று வருகிறதா என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது வரும் மழைகாலத்திற்குள் பாலப்பணியை முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார். அப்போது நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags : Investigation ,
× RELATED குரங்கு விசாரணை