கலெக்டர் தகவல் செம்போடையில் ஊராட்சி நிர்வாகம் குறித்து பயிற்சி

வேதாரணயம், ஜூன் 25: வேதாரண்யம் தாலுகா செம்போடையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகம் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட ஒருகிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் இளங்கோ பொதுசெயலாளர் செந்தில் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன், ஒன்றிய பொறுப்பாளர்கள் அன்பழகன், அருள்ராஜ், நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் நடத்துவது பற்றியும், அதன் சட்டவிதிகள் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெறும் அகஸ்தியன்பள்ளி திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். தழிழகத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் நடைமுறைப்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Panchayat Administration ,
× RELATED குன்றத்தூர் ஒன்றியம் எருமையூரில்...