காரைக்காலில் பைக் திருடிய சகோதரர்கள் கைது

காரைக்கால், ஜூன் 25: காரைக்கால் கீழகாசாக்குடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், கடந்த சனிக்கிழமை, கோவில்பத்து சாலையில் தனது அலுவலக வாயிலில் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை என, நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், காரைக்கால் திருநள்ளாறு சுப்ராயபுரத்தை சேர்ந்த மகேந்திரன் (23), வெங்கடேஷ் (21) ஆகிய சகோதரர்களை பிடித்து விசாரித்தபோது, மேற்கண்ட செந்தில்குமார் பைக்கை இருவரும் சேர்ந்து திருடியது தெரியவந்தது. தொடர்ந்து, சகோதரர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
Tags : Karaikal ,
× RELATED அண்ணனை மண்வெட்டியால் தாக்கிய தம்பி கைது