×

நாகை மாவட்டத்தில் தாட்கோ வாயிலாக ரூ.1.42 கோடி கடனுதவி

நாகை, ஜூன் 25:நாகை மாவட்டத்தில் தாட்கோ வாயிலாக ரூ.1.42 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் தாட்கோ மூலம் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்தார். வறுமை கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் தொழில் தொடங்கிட தாட்கோ மானியத்துடன் கூடிய நிதி உதவி செய்து வருகிறது. நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் இரண்டரை ஏக்கர் அல்லது 5 ஏக்கர் புஞ்சை வரையிலும் விவசாய நிலம் வாங்க முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். திட்ட தொகையில் மானியம் 30 சதவீதம் அதிகப்படியாக ரூ.2.25 லட்சம் வரையிலும் வழங்கப்படும். தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர்கள் தொழில் தொடங்க இதுவரை 97 பயனாளிகளுக்கு ரூ.112.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மகளிர் சுய உதவி குழுவில் 36 பயனாளிகளுக்கு ரூ.7.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களின் மூலம் தாட்கோ வாயிலாக 152 பயனாளிகளுக்கு ரூ.1.42 கோடி மதிப்பில் வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



Tags : Dadco ,district ,Naga ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...