கலெக்டர் தகவல் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை காரைக்காலில் கணவர் மது குடிக்க சென்றதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

காரைக்கால், ஜூன் 25: கணவர் மது அருந்த சென்றதால் மனைவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொன்டார்.காரைக்கால் பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மாவட்ட மின்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதாபிரியா(23). இவர் காரைக்கால் இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், சரவணன், நண்பர்கள் கொண்டாடிய மது விருந்தில் கலந்துகொண்டு வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் சரவணன் வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் மனவேதனையில் இருந்த கீதா பிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மாலை வீட்டுக்கு சென்ற கீதாபிரியாவின் தந்தை கோவிந்தராஜ், மகள் கீதா பிரியா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, நகர காவல் நிலையத்திற்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : suicide ,Karaikal ,
× RELATED மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது