பொதுமக்கள் எதிர்பார்ப்பு கரூர் தாலுகா அலுவலகம் அருகே வேகத்தடையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அவலம்

கரூர், ஜூன் 25: கரூர் ஜவகர் பஜார் தாலுகா அலுவலகம் முன்புறம் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது. வேகத்தடை அமைக்கப்பட்டபோது ஒளி உமிழும் வர்ணம் பூசப்பட்டது. பின்னர் அது அழிந்து விட்டது. எனினும் மீண்டும் வர்ணம் பூசி பராமரிக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். பலர் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து எழுந்து செல்கின்றனர். விபத்துக்கு வழிவகுக்கும் இந்த சாலையில் உள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Public Expectations Accidents ,office ,Karur Taluk ,
× RELATED கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற...