×

கிருஷ்ணராயபுரம் வீரக்குமரன்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

கரூர், ஜூன் 25: கிருஷ்ணராயபுரம் வீரக்குமரன்பட்டியில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக பொதுமக்கள் வழங்கிய மனுக்களில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம் வாங்கல் மேலச்சக்கரபாளையம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி வழங்கிய மனுவில், கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட என்.புகளூர் ஊராட்சியில் இருந்து நெரூர் ஊராட்சி வரை 12 ஆயிரம் ஏக்கருக்கு நீர்பாசன வசதி அளிக்கும் பாப்புலர் முதலியார் வாய்க்காலின் இருகரையும் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. தூர்வாரப்படும் மண் இருகரையிலும் கொட்டுவதால் மீண்டும் வாய்க்காலுக்குள்ளேயே மண் சரிந்து வாய்க்கால் மூடப்படும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலின் இருகரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு தூர் வாரி எடுக்கப்படும் மண்ணை பக்கவாட்டில் இருக்கும் வாய்க்கால் நிலத்தில் கொட்டி சமன்படுத்தி வாய்க்காலை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.கிருஷ்ணராயபுரம் தாலுகா வீரக்குமரன்பட்டி பகுதியினர் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ஆணை வந்துள்ளது. இங்கு புறம்போக்கு நிலம் உள்ளது. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு புறம்போக்கு இடத்தில் அங்கன்வாடி கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் அண்ணாநகர், கரியம்மாபுதூர், வேட்டுவபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:எங்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க முயற்சிகள் நடைபெறுவதாக தெரியவருகிறது. குடியிருப்பு பகுதியில் கல்குவாரி, கிரஷர் அமைந்தால் வெடி வைக்கும் போது, அதிர்வு ஏற்படும். வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். அதில் இருந்து வெளியேறும் பாறை பவுடரால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. எனவே எங்கள் பகுதியின் அருகே குவாரி மற்றும் கிரஷர் அமைப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.


Tags : collector ,office ,Karur ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்