கரூர் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றி திரியும் ஆடுகளால் பயணிகள் அவதி

கரூர், ஜூன் 25:  கரூர் ரயில் நிலையத்தின் முன் பகுதியில் ஆடுகள் சுற்றி திரிகின்றன. ரயில் நிலையம் முன்புறம் உள்ள நடைமேடையில் வரிசையாக ஆடுகள் படுத்து தூங்குகின்றன. இதனால் நடைமேடையில் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். ஆடுகளை வளர்ப்போர் தோட்டங்களில் வயல்வெளிகளில் அவற்றை பராமரிக்க வேண்டும். பொதுஇடமான ரயில் நிலைய வளாகத்தில் அவற்றை விடுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். ரயில் நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Travelers ,railway station ,Karur ,
× RELATED ராயபுரம் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடக்கும் தண்டவாள பணிகள்