×

தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணையில் மழை நீர் சேமிக்க வழியின்றி வறண்டு கிடக்கும் குளம்

கரூர், ஜூன் 25: கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் வெள்ளியணையில் 5 ஏக்கர் பரப்பரளவில் குளம் உள்ளது. குடகனாற்றில் இருந்து வரும் நீர் இந்த குளத்திற்கு வந்து சேரும். குடகனாற்றில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. அணையில் நீரின்றி இருப்பதால் குளத்திற்கு மழை நீர்மட்டுமே ஆதாரமாக இருக்கிறது. பருவமழைக்கு முன்னதாக வெள்ளியணை குளத்தை தூர்வார வேண்டும் என ஒவ்வொரு முறையும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் குளத்தில் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. ஆக்கிரமிப்புகள் அகற்றாததாலும், சீத்தை முட்களை அப்புறப்படுத்தாததாலும் வெள்ளியணை குளம் முட்கள் முளைத்து காணப்படுகிறது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வெள்ளியணை குளத்தை மேம்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது. எனினும் மழை நீர் சேமிக்கப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி மழை நீரை சேமிக்க ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.



Tags : Dandoni Union ,pond ,Union ,
× RELATED தாந்தோணிமலை அரசு குடியிருப்பு பகுதியில் இடிந்த நிலையில் நாடக மேடை