×

தோகைமலை ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏசெந்தில்பாலாஜி சூடான கேள்வி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காமல் எடப்பாடி அரசு யாகம் வளர்ப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனை பிரசார கூட்டம்

தோகைமலை, ஜூன் 25: தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடக்கவிருந்த சங்கு ஊதும் போராட்டம் வாபஸ் பெற்றதால் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது.கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடந்தது. தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்த இக்கூட்டத்திற்கு கட்சியின் நிர்வாகிகள் முனியப்பன், ரெத்தினம், சங்கபிள்ளை, ரமேஷ், தங்கராசு, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன் கலந்து கொண்டு பேசினார்.

தோகைமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. ஊசிபோடுவதற்கு ஆண்களையும், பெண்களையும் ஒரே இடத்தில் நிற்க வைக்கின்றனர். வெளியில் இருந்து வரும் நோயாளிகளுக்கு கழிப்பிட வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 50 வருடங்களுக்கு மேலாக இருந்த தாய்சேய் நலவிடுதியை இடித்துவிட்டு புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுகிறோம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்து இருந்தனர். ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்களிலும் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் காவிரி குடிநீர் வழங்க திட்டம் இருந்தும் இன்றுவரை அதை நிறைவேற்றவில்லை.மேலும் தோகைமலை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து சங்கு ஊதும் போராட்டம் அறிவித்து இருந்தோம். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகளை விளக்கும் வகையில் இந்த கூட்டம் நடந்தது.

Tags : MLAsenthalpologi ,demonstration ,public ,Dohakaimalai ,government ,Marxist Communist Thermopolitan Campaign Meeting ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...