×

கரூர் பகுதியில் சாலைகளில் ரிப்ளக்டர் இல்லாததால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து

கரூர், ஜூன் 25: கரூர் பகுதியில் சாலைகளில் ரிப்ளக்டர் இல்லாததால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்படுகிறது.கரூரில் இருந்து செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்வதற்கும், வருவதற்கும் உதவியாக இவை அமைக்கப்பட்டன. எனினும் இவற்றில் கருப்பு. வெள்ளை பெயிண்ட் பூசியதோடு நெடுஞ்சாலைத்துறையினர் விட்டு விட்டனர். பகல் வேளைகளில் மட்டுமே வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும்.இரவு நேரத்தில் ஒளிஉமிழும் வர்ணம் அல்லது ரிப்ளக்டர்களை பொருத்தினால் தான் தூரத்திலேயே வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியும். ஆனால் ரிப்ளக்டர்கள், ஜிப்ரா கோடுகள் போடப்படவில்லை.

இதனால் கோவை, ஈரோடு, மதுரை, சேலம் சாலைகளில் அடிக்கடி சென்டர் மீடியன் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. சென்டர் மீடியன் தொடங்கும் இடம், நடுவில் பாதை விடப்பட்டுள்ள இடம், முடியும் இடம் ஆகியவற்றில் ரிப்ளக்டர்களை பொருத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் விபததுக்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனியாவது விபத்து தடுக்கும் நோக்கில் ரிப்ளக்டர்களை பொருத்த வேண்டும். ஜிப்ரா கோடுகளை வரைய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Karur ,accidents ,roads ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்